மழையில் நனைந்துவிட கூடாது
என்றுதான் குடை பிடித்தோம் !
ஆனாலும் நனைந்து கொண்டுதான் இருக்கிறோம்
முத்த மழையில் இதமாக.........
மனதை இரும்பாக்கி💓💓💓
நான் கைகள் ஏந்திய மலர்களை
வாங்க மறுத்தாள் அவள் !
உடனே வாடியது மலர்கள்
என் முகத்தை போலவே......
www.karpanaikoodam.blogspot.comkalaivanan in karpanai koodam
சிற்பியும் தவித்திருப்பானோ !
சிற்பத்தின் சிறு இடையில் சிக்கி
வெளிவர மனமின்றி
என்னைப்போல்......
kalaivanan in karpanai koodamwww.karpanaikoodam.blogspot.com
உலகம் உருண்டை என்பதை ஏற்க
தொடங்கினேன்!
அவள் கருவிழிகளில் நான்
தொலைந்த பிறகு.....
சிரமமென்று எண்ணாமல்
மலைகள் தாண்டி
கடல்கள் தாண்டி
தினமும் வந்து போகிறாள் என் நினைவில்......
அவள் என்னை மறந்த போதிலும்😭
நான் கண்ட கண்ணகி அவள்
அதனால் தானோ !
இன்று காரணம் இல்லாமல் இறக்கிறேன்
கோவலனை போல் !
அவள் மேல் கொண்ட காதலால் .....
அவள் அழகு படுத்த அணிந்து கொண்ட
ஆபரணம் அனைத்தும் அழகானது
அவள் அங்கம் ஏறிய பின்...
சூரியனின் காதல்...
எங்கு அவள் உறங்கி விடுவாளோ என்றும்....அவள் உறக்கம் கலைந்து விடுமோ என்றும்....தனது கால நேரங்களை தாமத படுத்தி கொள்கிறது சூரியன். அவள் மீது கொண்ட காதலால்....
எங்கு அவள் உறங்கி விடுவாளோ என்றும்....
அவள் உறக்கம் கலைந்து விடுமோ என்றும்....
தனது கால நேரங்களை தாமத படுத்தி கொள்கிறது சூரியன்.
அவள் மீது கொண்ட காதலால்....